Scroll

Putra Kameshti Homam on 13/10/2018 @ Chennai and registration Module has been started now

10 August 2014

VARALAKSHMI VRATA

VARALAKSHMI VRATA


Varalakshmi Vrata is a festival to propitiate the goddess Lakshmi, the consort of Vishnu, one of the Hindu Trinity. Varalakshmi is one who grants boons (Varam). It is an important pooja performed by married women in most of the southern states of Indi. The Hindu festival going by the name ‘Vara Lakshmi Vrata’ is celebrated on the Second Friday or the Friday before full moon day – Poornima in the month of Śravaṇā, also called Śawan in Hindi and Aadi in Tamil which corresponds to the English months of July–August.
Varalakshmi Vrata is performed by married woman for the well being of all the family members, especially husband, to get progeny etc. It is believed that worshiping Goddess Varalakshmi on this day is equivalent to worshiping Ashtalaksmi – the eight goddesses of Wealth, Earth, Learning, Love, Fame, Peace, Pleasure, and Strength.  There are many stories from various puranas on how this Vrata Puja has been part and how the devotees have attained benefits by performing Varalakshmi Puja

Vedas - 8 Types of Marriages

EIGHT (8) TYPES OF MARRIAGES

வேதங்கள் குறிப்பிடும் திருமண முறைகள் எட்டு:

பிரமம் - கன்னியை அணிகலன்கள் பூட்டிப் பிரமச்சாரி ஒருவனுக்குத் தானமாகத் தருவது. (spinster)

பிராஜாபத்தியம் - கோத்திரம் அறிந்து பெண் கேட்பவனுக்குப் பெற்றோர் பெண்ணை மணம் முடித்துத் தருவது. (Sect/sub-sect)

ஆரிடம் - ஒன்றோ, இரண்டோ, பசுவோ, எருதோ வாங்கிக்கொண்டு பெண் தருவது. (Dowry)

தெய்வம் - வேள்வி ஆசிரியன் ஒருவனுக்கு வேள்வித் தீ முன்னர் பெண்ணைத் தருவது. (Gift to Guru)

காந்தருவம் - ஒத்த இருவர் தாமே கூடும் கூட்டம். (Pure Love)

ஆஸுரம் - 'வில்லேற்றியவனுக்கு வழங்குவேன்' என்பது போல் ஒன்று சொல்லி அது செய்தார்க்குப் பெண் தருவது. (Chellenger)

இராக்ஷஸம் - ஆண் பெண்ணைத் தூக்கிச் சென்று திருமணம் கொள்வது. (Rudeness)

பைசாசம் - கள்ளுண்ட பெண்ணிடமோ, உறங்கும் பெண்ணிடமோ ஆண்மகன் உறவு கொள்வது. (Unconsicious)

Health is Wealth

HEALTH IS WEALTH

நாட்டுமருந்துப்பொடிகளின் உபயோகம் :

அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வப் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கராப் பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நாவல்ல் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பொடி:- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாழைப் பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

How to Increase Wealth

How to increase wealth

எதை செய்தால் செல்வம் பெருகும் .....

1) மல்லிகை, முல்லை, தாமரை போன்ற மலர்களை பணம் வைக்கும் இடத்தில் தினசரி புதிதாக வைக்க வேண்டும்.


2)  வலம்புரி சங்கை ஓசை வரும்படி பூஜையறையில் வைக்க வேண்டும்.


3)  வீட்டு வாசலில் கணபதி, மகாலஷ்மி, வெங்கடாஜலபதி போன்ற தெய்வங்களின் உருவங்களை அல்லது சின்னங்களை வைக்க வேண்டும்.

4)  மாதத்தில் ஒருமுறை சிறந்த பிராமணருக்கும், வாரத்தில் ஒருமுறை இயலாத பிச்சைக்காரனுக்கும், தினமும் ஒருமுறை எறும்புக்கும் தானம் கொடுக்க வேண்டும்.

5)  வீட்டில் துளசி, மல்லிகை போன்ற செடிகளை வளர்க்க வேண்டும்.


6)  சாளக்கிரமம், ருத்ராட்சம், பாதரசம், தாமரைப்பூ, பசுஞ்சாணம் இவற்றில் எதாவது ஒன்று வீட்டில் தினசரி இருக்க வேண்டும்

Eating Procedures

Eating Procedure

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?
சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.